பத்தாம் திருமுறை
1237 பதிகங்கள், 3000 பாடல்கள்
முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6


பதிக வரலாறு :

இதனால், `இம்மயக்கிற்குக் காரணம் செல்வச் செருக்கும், புல்லறிவாண்மையும் ஆம்` என்பது கூறுமுகத்தால், `அக் காரணத்தை அகற்றியொழுகல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
இத்திருமந்திரம், வருகின்ற அதிகாரத்திற்கும் தோற்றுவாய் செய்து நிற்றல் அறிக.
``காய்ச்ச பலாவின் கனி, திருத்தி வளர்த்த தேமாங்கனி`` என்னும் உவமைகளால் மனையாளோடு கூடுதலை அறம் என்றே நாயனார் நேர்ந்தமையால், `மகளிர் இழிவு` என்பது வரைவின் மகளிராகிய பொது மகளிரது இழிவையேயாம்.
அறத்தான் வருவதே இன்பம்,மற்; றெல்லாம்
புறத்த புகழும் இல. -குறள் - 39
எனத் திருவள்ளுவரும், `இல்லறத்திற்குத் துணையாகக் கொண்ட மனையாளோடு இன்பம் நுகர்தல் அறமும், புகழுமாகும்` என உடன்பட்டும், பிறவகையால் இன்பம் நுகர்தல் அன்னவாகா என மறுத்தும் பொதுப்படக் கூறிப் பின்னரும் காமத்துப்பாலை விரிக்கும் முகத்தால் மனைவியின் இன்பத்தை உடன்படுதலையும், `பிறனில் விழையாமை, வரைவின் மகளிர்` அதிகாரங்களால் பிற இன்பங்களை மறுத்தலையும் சிறப்பாகக் கூறினமை காண்க. பொது மகளிரோடு கூடுதலை ஐந்து திருமந்திரங்களால் விலக்குகின்றார்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.